கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி திரையரங்குகளில் வெளியான நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானத்துக்கு சினிமாவிலும் வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. இதனால் ஒருகட்டத்தில் காமெடி கேரக்டர்களை தவிர்த்துவிட்டு முழுநேர ஹீரோவாக மாறினார். ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் பெரிதாக போக வில்லை.
கடைசியாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த சந்தானம், இப்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் கலெக்சனில் மாஸ் கட்டி வருகிறார்.
600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ஃபேமிலி ஆடியன்ஸுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
அதன்படி முதல் நாளில் 70 லட்சம் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதேநேரம் சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர்கள் 1 முதல் 1.5 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.