Chandramukhi 2: வெளியானது ராகவா லாரன்சின் வேட்டையன் லுக்…

by vignesh

ராகவா லாரன்சுடன் கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்களும் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளனர். மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அரண்மனைகளிலும் அரண்மனை செட் போடப்பட்டும் இந்தப் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். வேட்டையன் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளதை கூறியுள்ள அவர், அனைவரது ஆசிர்வாதங்களும் தேவை என்றும் கூறியுள்ளார். அவரது இந்த வேட்டையன் லுக் மிரட்டலாக அமைந்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்புகளையும் கூட்டியுள்ளது. படம் முந்தைய பாகத்தின் சிறப்பை எப்படி மீண்டும் கொண்டுவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment