தமிழ்த்திரை உலகில் 60களில் யதார்த்தமான நடிப்பை நடித்து நவரசத்தையும் வெளிப்படுத்தும் நடிகர் என்றால் அது கண்ணை மூடிக்கொண்டு நாம் சட்டென்று முத்துராமன் என்று சொல்லிவிடலாம்.
அண்ணா கதை எழுத, கலைஞர் வசனம் எழுதிய ரங்கோன் ராதா படத்தில் வக்கீலாக நடித்து அறிமுகமானார். இது 1956ல் வெளியானது. அதன்பிறகு எம்ஜிஆருடன் அரசிளங்குமரியில் நடித்து அசத்தினார். நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வம், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசே தான் கடவுளடா, எதிர்நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் என பல படங்களில் நடித்து அசத்தினார்.
போக்கிரி ராஜா படத்தில் வில்லனாக நடிக்க முத்துராமனிடம் பஞ்சு அருணாச்சலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வில்லன் கதாபாத்திரம் என்றால் வேணாம் என சொல்லி விட்டாராம், மேலும் தான் நல்ல கதாபத்திரங்களில் நடித்துவிட்டு ஏன் வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டாராம். பின்னர் டிரைக்டர் நீங்க ஏன் வில்லன்னா அப்படி பார்க்குறீங்க. நெகடிவ்வா இருந்தாலும் இது ஸ்கோப் உள்ள நல்ல கதாபாத்திரம். இது காமெடி கலந்த நல்ல பாத்திரம். இதுல நீங்க நடிச்சா ரொம்ப வெற்றி பெறும். நல்ல பேரு கிடைக்கும்னு பஞ்சு அருணாச்சசலம் சொன்னாராம். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் அவருக்கு ஏற்ப பல மாற்றங்களைச் செய்தாராம் பஞ்சு அருணாச்சலம். அதன்பிறகே முத்துராமன் நடிக்க சம்மதிச்சாராம்.