இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ’சூரரைப்போற்று’ ஹிந்தி படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த மறைமுகமான அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்று சுதா கொங்கராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த ஜிபி பிரகாஷ் ’உங்களது ’சூரரைப்போற்று’ ஹிந்தி வெர்ஷன் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் அதே போல் அடுத்த படம் தமிழில் எது என்று குறிப்பிட்டு பயர் எமோஜிகளை வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து சுதா கொங்கரா அடுத்த படம் சூர்யாவின் 43 வது படம் தான் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.