மாவீரன் குறித்து சிவகார்த்திகேயன் மாஸ் ஸ்பீச்!

by vignesh

நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது மாவீரன்.

மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக படத்திற்கான பிரமோஷன்கள் அதிரடியாக நடத்தப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன், இந்தப் படம் தன்னுடைய வழக்கமான படமாக இருக்காது எனவும், டாக்டர் படத்தை போல வித்தியாசமான ஜானரில் இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள், அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும்வகையில் சிறப்பாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment