பார்வையற்றவராக நடிக்க மால்வி மல்ஹோத்ரா பயிற்சி…

by vignesh

லையாளத்தில் திலீப், கீர்த்தி சுரேஷ், ஹனிரோஸ் நடித்து வெற்றிபெற்ற படம் ‘ரிங் மாஸ்டர்’. இந்தப் படத்தின் ரீமேக் மூலம் தமிழில், அறிமுகமாகிறார், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ள மால்வி மல்ஹோத்ரா. தமிழில் திலீப் நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.கே.நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் வேடத்தில் மால்வி மல்ஹோத்ரா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அபிராமி நடிக்கிறார். படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.

இதில் பார்வையற்றவராக நடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டதாக நடிகை மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

‘ரிங் மாஸ்டர்’ தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையற்றப் பெண்ணாக நடிப்பதற்காக, இதன் படப்பிடிப்புக்கு முன் பார்வையற்றவர்களாகப் பலர் நடித்த படங்களைப் பார்த்தேன். நாள் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டு வீட்டைச் சுற்றி நடந்து பயிற்சி செய்தேன். அதன் மூலம் பார்வையற்றவராக இருப்பது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். கண்களை மூடிக் கொண்டு பல் துலக்கினேன். இதுபோன்ற பயிற்சிகள், நடிக்கும்போது அதிக நம்பிக்கையைத் தருகிறது. இவ்வாறு மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment