‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்…

by vignesh

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் நடைபெற்றது

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்:

* ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருபக்கமும் ரஜினியின் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.

* ரசிகர்களுக்காக ரஜினி நடித்த படங்களின் பாடல்கள் டிஜே மூலம் ஒலிபரப்பப்பட்டன. இப்பாடல்களுக்கு ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் நடனமாடினர்.

* இந்த நிகழ்வை நடிகர் கவின், ரம்யா இருவரும் தொகுத்து வழங்கினர்.

* ரஜினி அரங்கினுள் நுழைந்தபோது ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது.

* தன் இருக்கைக்கு செல்வதற்கு முன்பாக இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரை ரஜினி கட்டியணைத்து விட்டு சென்றார்.

* மேடையில் ரஜினி பேசியபோது குறுக்கே இடைமறித்த ரம்யா கிருஷ்ணன், “வயசானாலும் உங்கள் அழகும் உங்கள் ஸ்டைலும் உங்களை விட்டு போகவில்லை” என்று ’படையப்பா’ படத்தின் வசனத்தை பேசியபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

* தனது பேச்சின் இடையே ரஜினி சொன்ன காகம் – கழுகு பற்றிய குட்டிக் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* நெல்சன் பேசும்போது, ‘ஜெயிலர்’ படத்தை இயக்க விஜய்தான் முதலில் தனக்கு நம்பிக்கை கொடுத்ததாக பேசினார்.

You may also like

Leave a Comment