ஸ்ரீவித்யாவுடன் காதல்- கமல் உருக்கம்…

by vignesh

நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், தனது 19 வயதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போதே, நான் திறமையாளர் என்று உணர்த்தியவர் ஸ்ரீவித்யா என்று கூறினார். இதனால் டிடி அவர் உங்களது தோழியா? என்று கேட்டதற்கு இல்லை எனது காதலி அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதேபோல் கமல் உடனான காதல் பற்றி நடிகை ஸ்ரீவித்யா மறைவுக்கு முன் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், நானும் கமலும் காதலிச்சது ஒட்டுமொத்த திரையுலகுக்கே தெரியும்.ஒரு கட்டத்தில் என் தாயார் எங்கள் இருவரையும் அழைத்து உங்கள் இருவருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதனால் இந்த காதலெல்லாம் வேண்டாம் என சொன்னார். இதனால் கமலுக்கு கோபம் வந்து அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தினார்.

பின்னர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்ட உடன் அப்படியே உறைந்து போனேன்” என ஸ்ரீவித்யா கூறினார். நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment