யோகி பாபுவின் லோக்கல் சரக்கு அப்டேட்…

by vignesh

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு.

அந்த வகையில் மாவீரன், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். குய்கோ படத்தில் ஹீரோவாகவும் கடைசியாக கலக்கியிருந்தார். இப்படி கலந்துகட்டி நடிக்கும் யோகி பாபு இப்போது லோக்கல் சரக்கு என்ற படத்திலும் காமெடி ஆக்டராக நடித்திருக்கிறார்.

வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்க, நாயகியாக உபாசனா ஆர்.சி நடித்திருக்கிறார்.

இந்த சூழலில் படமானது ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபு கூட்டணியின் காமெடி காட்சிகளும், பாடல் காட்சிகள் கதையோடு பயணிக்கும் வகையில் இருப்பது ட்ரெய்லரை பார்க்கையில் உறுதி செய்ய முடிகிறது.

 

You may also like

Leave a Comment