மத்தகம் என்கிற தலைப்பு ஏன்? இயக்குநர் விளக்கம்…

by vignesh

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக அதர்வா, மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ என்கிற இணையத் தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார்.

வெப் சீரீஸ் வெளியாகவிருக்கும் நிலையில்  மத்தகம் என ஏன் பெயரிட்டோம் என இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

யானையின் முன் நெற்றிப் பகுதியைக் குறிக்கும் சொல். பாறையில் மோதினாலும் உடையாத அளவுக்கு வலிமை வாய்ந்தது. யானையின் மூளையைக் காக்கக்கூடிய தாகவும் இருக்கிறது. இத்தொடரில் காவல் துறை – கேங்ஸ்டர் என இரண்டு குழுக்கள் இருக்கின்றன.

இரு தரப்புமே ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கு வியூகங்களை அமைக்கிறார்கள். நேரடியாகக் கதையின் கருவைப் பிரதிபலிக்காமல் அதற்கு ஓர் உருவகமாக இருக்க வேண்டும். அதற்காக இப்படியொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்.

You may also like

Leave a Comment