சமந்தா எங்கே என கேட்ட முன்னாள் மாமனார் நாகர்ஜுனா???

by vignesh

நேற்று தெலுங்கு பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கிய நிலையில் அதில் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். ஆனால் சமந்தா வரவில்லை.

நடிகர் நாகர்ஜுனா தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்குகிறார். அவர் சமந்தாவின் முன்னாள் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போனால் அவரை சந்திக்க நேரிடும் என்பதாலே சமந்தா வரவில்லையா என பேச்சு எழுந்திருக்கிறது.

சமந்தா பற்றி நாகார்ஜுனா விஜய் தேவரகொண்டாவிடம் ஷோவில் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் ‘சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மயோசிட்டிஸ் சிகிச்சை பெறுவது மட்டுமின்றி குஷி ப்ரோமோஷனும் செய்து வருகிறார்’ என விஜய் தேவரகொண்டா கூறி இருக்கிறார்.

You may also like

Leave a Comment