நடிகை ரம்யாவுக்கு மாரடைப்பா?.. தீயாய் பரவும் வதந்தி..

by vignesh

தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 40 வயதாகும் நடிகை ரம்யா நேற்று இரவு வரை ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த நிலையில், திடீரென தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக வதந்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் இணைந்து ரொம்பவே ஆக்டிவான அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். 1982ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பெங்களூருவில் பிறந்த இவர் 2003ம் ஆண்டு அபி எனும் கன்னட படத்தில் அறிமுகமானார்.

இந்நிலையில், திடீரென இவர் குறித்து இப்படியொரு மரண வதந்தி பரவ என்ன காரணம் என்றே தெரியவில்லை என்கின்றனர். நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? இந்த வதந்திக்கு அவரே விளக்கம் கொடுத்திருப்பாரே, அவருக்கு என்ன தான் ஆச்சு? என்கிற கேள்விகளையும் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ரம்யா ஜெனிவாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் இப்படியொரு வதந்தியை கிளப்பியவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா என விளாசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

You may also like

Leave a Comment