‘வெப்பன்’ படத்தில் இளம் வயது சத்யராஜ்???

by vignesh

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வெப்பன்’. இப்படத்தில் வஸந்த் ரவி, ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது.

இப்படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிக்காக ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளவயது சத்யராஜை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இது குறித்து படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறியதாவது: படத்தில் சத்யராஜுக்கு சூப்பர் பவர்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரம். அவருக்கு சூப்பர் பவர் எப்படி கிடைத்தது என்பதை விளக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி ஒன்றை படத்தில் வைத்திருக்கிறோம். இந்த காட்சிக்காக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இளவயது சத்யராஜின் தோற்றத்தை உருவாக்கியுள்ளோம். இந்திய சினிமாவில் ஏஐ மூலம் கிராஃபிக்ஸ் பணிகள் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

You may also like

Leave a Comment