விவாகரத்து வேண்டாம் மனைவி தான் வேண்டும்: அடம் பிடித்த விஷ்ணு விஷால்

by vignesh

விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் லால் சலாம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த விஷ்ணு விஷால் ஒரு கட்டத்தில் நடிகராக சினிமாவில் அறிமுகமானார்.  தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த இவர் இல்லற வாழ்க்கையில் தோல்வியைத் தான் தழுவினார்.

ஆம் இவர் நீர்பறவை படத்தில் நடித்த போது அந்த படத்தின் துணை இயக்குனர் நடராஜன் என்பவரின் மகள் ரஜினியை காதலித்து விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஆரியன் என்ற ஒரு மகன் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

முதல் திருமணம் குறித்து ஓபனாக பேசிய விஷ்ணு விஷால் தன்னிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்ற முடிவை ரஜினி தான் அதாவது அவரது முதல் மனைவி தான் எடுத்தாராம். மேலும் கோட்டில் கூட ரஜினி தான் என்னை பிரிய வேண்டும் என்று சொன்னார், எனக்கு மனைவி வேண்டும் என்று தான் சொன்னதாகவும் பிறகு அவர் மனைவி இறுதி வரை பிரிய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் ஒத்துக்கொண்டதாகவும் ஆனால் இப்போதும் தன்னுடைய மகன் படிப்பு செலவு மற்றும் அவனுக்கு தேவையானவற்றை தான் வாங்கித் தருவதாகவும் சொன்னார்.

You may also like

Leave a Comment