விஜயகாந்த் சமாதியில் விஷால் உருக்கம்

by vignesh

கடந்த டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களுக்கே பேரதிர்ச்சியாக மாறியது. இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய விஷால் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கேப்டன் விஜயகாந்த் சமாதியில் மாலை அணிவித்து மனமுருகி வேண்டிக் கொண்ட விஷால் அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து விஜயகாந்த் பற்றியும் அவரது அலுவலகத்துக்கு யார் சென்றாலும் பசியோடு திரும்பிப் போக மாட்டாங்க, விஜயகாந்த் அண்ணனும் ராவுத்தர் அண்ணனும் பலருக்கும் உணவளித்த விஷயங்களை எடுத்துரைத்தார்.

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவுக்கு சரியான அஞ்சலி செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்றீங்க விஷால் என்கிற கேள்விக்கு கேரளாவிலோ, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்திருந்தாலும் ஓடோடி வந்திருப்பேன். வெளிநாட்டில் சிக்கிக் கொண்டேன். உடனடியாக வர முடியாத சூழல். எனக்கே நான் சொல்லிக் கொண்டது என்னவென்றால் கையாளாகாதவன் ஆகிட்டியேடா என்று தான். விஜயகாந்த் சாமி காலை தொட்டு கடைசியா ஒருமுறை கும்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லை என உருக்கத்துடன் விஷால் பேசினார்

You may also like

Leave a Comment