விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் எப்ப ரிலீஸ்???

by vignesh

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தின் இரண்டு பாடல்களை படக்குழு இதுவரை வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (செப்டம்பர் 3) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் செப்.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

You may also like

Leave a Comment