விஜய் கட்சியில் சேரப் போகிறாரா விஷால்??? என்ன சொன்னாருன்னு பாருங்க…

by vignesh

விஜய் கட்சி தொடங்கினால் அதில் இணைவீர்களா என்ற கேள்விக்கு விஷால் பதிலளித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவு தனது மக்கள் இயக்க செயல்பாடுகளிலும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மாணவ, மாணவிகளை சந்தித்தது, அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பாடசாலையை திறந்து, ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் செய்வது என விஜய் மக்கள் இயக்கத்தினர் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ரொம்ப வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் சமீப காலமாகத்தான் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான விதை விதைக்கும் பணியில்தான் இப்போது ஈடுபட்டிருக்கிறார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை தொடங்கி நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர். அதை உணர்த்தும் விதமாக போஸ்டர்களையும் அடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில். கல்லூரி விழா ஒன்றில் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், விஜய் கட்சி தொடங்கினால் நீங்கள் அதில் இணைவீர்களா என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், “அது கடவுளின் கையில்தான் இருக்கிறது. கடவுளின் முடிவு எதுவாக இருந்தாலும் அதன்படி நான் செயல்படுவேன். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

You may also like

Leave a Comment