ஜெயிலர் வில்லன் விநாயகன் ஜாமீனில் விடுவிப்பு !

by vignesh

 மலையாள நடிகர் விநாயகன் தமிழில், திமிரு, சிலம்பாட்டம், ஜெயிலர் ,மரியான்உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது மனைவியிடம் பிரச்சினை செய்ததாக எழுந்த புகாரில், எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீஸார் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். மது போதையில் இருந்த அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் அவரை போலீஸார் கைது செய்தனர். பிறகு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

You may also like

Leave a Comment