விஜயகுமார் பேத்திக்கு டும்… டும்… டும்.. முதல் பத்திரிகை யாருக்கு தெரியுமா???

by vignesh

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முன்பே திரையுலகில் பிரபலமாக இருந்தவர் விஜயகுமார். விஜயகுமார் ஹீரோவாக நடித்த ’மாங்குடி மைனர்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் காலப்போக்கில் ரஜினிகாந்த் பெரிய நடிகராகி சூப்பர் ஸ்டார் ஆன நிலையில், விஜயகுமார் வில்லன் மற்றும் அப்பா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

விஜயகுமாருக்கு அருண் விஜய் என்ற மகனும் வனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் என ஐந்து மகளும் உள்ளனர்.  இதில் அனிதா விஜயகுமார் மட்டுமே  சினிமாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது மகள் தியா என்பவருக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது. திலான் என்பவரை தியா திருமணம் செய்ய இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் தியாவுக்கு வரும் 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விஜயகுமார் தனது மகளுடன் சென்று முதல் பத்திரிகையை வைத்துள்ளார்.

ரஜினியும், விஜயகுமாரும் இணைத்து பல படங்களில் நடித்துள்ளனர் ஆகையால் கண்டிப்பா முதல் ஆளாக திருமணத்தில் இருப்பார் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

You may also like

Leave a Comment