விஜயகாந்த் பொண்ணு பார்க்கும் போது நடந்த சம்பவம் நெகிழ்ந்த மனைவி

by vignesh

நடிகர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று அவருடைய ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.நடிகர் விஜயகாந்துக்கு அதிகமான தங்களுடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் மனைவி தங்களுடைய திருமணம் எந்த மாதிரி சூழ்நிலையில் நடைபெற்றது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

 

விஜயகாந்த் பிரேமலதாவை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இன்று விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் தன்னுடைய மகன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான காட்சிகளை வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி அவரை எப்படி தான் திருமணம் செய்து கொண்டேன் என்பது பற்றியும் அவருடைய மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

எல்லோருக்குமே தெரியும் விஜயகாந்த் சபரிமலைக்கு மாலை அணிந்து போவார் என்பது. அந்த மாதிரி தான் அவர் என்னைப் பெண் பார்க்க வரும்போது காவி வேஷ்டி சட்டை அணிந்து ஒரு சாமியார் போல காலில் செருப்பு கூட போடாமல் வந்திருந்தார். அவரைப் பார்த்தது என் அம்மாவுக்கு ரொம்பவே பிடித்து போனது.

என்னை விடவும் என்னை எங்களுக்கு திருமணம் நடந்துவதில் என்னுடைய அம்மா ஆர்வமாக இருந்தார். அப்போது எல்லார் வீட்டில் நடப்பது போன்று பெண் பார்க்கும் படலம் நடந்தது. பிறகு தொலைபேசியில் தான் என்னிடம் முதல் முதலில் பேசினார். அவருடைய குரலை போனில் கேட்ட போது என்னுடைய கை கால் எல்லாம் எனக்கு வெடவெடத்து போனது. அவருடைய கட்டையான குரலில் ஹலோ என்றார். பிறகு பேசிப் பார்த்த பிறகு தான் எனக்கு அவர் வெள்ளந்தியான மனிதர் என்பது தெரிந்தது. அவர் எனக்கு கணவராக கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு விஜயகாந்த் 1 வயதில் இருக்கும்போதே அவருடைய அம்மா இறந்து போய்விட்டார். அதற்கு பிறகு அவருடைய அப்பா தான் வளர்த்து வந்திருக்கிறார். அதனால் தான் விஜயகாந்த்க்கு லேட்டாக திருமணம் நடந்திருக்கிறது. அவருடைய அப்பாவின் பாசத்தை வைத்து தான் “வானத்தைப்போல திரைப்படத்தில் கூட சேவல் ஒன்று அடைகாக்கிறது” என்பது போல பாடல் வரும் என்றும் அந்த பேட்டியில் பல ரகசியங்களையும் பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்து இருக்கிறார்.

You may also like

Leave a Comment