வாழும்போதே கடவுள் ஆனவர் விஜயகாந்த்!!! நடிகர் ஜெயம் ரவி…

by vignesh

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசன், விஷால், விக்ரம், ஜெயம்ரவி, சதீஷ், கருணாகரன், மன்சூர் அலிகான், எம்எஸ் பாஸ்கர், சந்திரசேகர் உள்ளிட்ட நடிகர்களும் சச்சு, அம்பிகா, தேவயானி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகளும் பங்கேற்று விஜயகாந்தின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது நினைவுகளையும் சிறப்புகளையும் பகிர்ந்துக் கொண்டனர். மிகவும் நெகிழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, எல்லாரும் இறந்தால்தான் கடவுள் ஆவார்கள். சிலர்தான் வாழும்போதே கடவுள் ஆவார்கள், அதுபோன்றவர்தான் கேப்டன் விஜயகாந்த் என்று தெரிவித்தார். அவர்குறித்த பல அனுபவங்கள் தனக்கு இருந்தாலும் அதை ஷேர் செய்யக்கூட தோன்றவில்லை என்றும் தானே தன்னுடைய இதயத்தில் வைத்துக் கொள்வதாகவும் ஜெயம்ரவி குறிப்பிட்டார்.

You may also like

Leave a Comment