லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் நடிகர் விஜய்.. எதுக்கு தெரியுமா???

by vignesh

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படம் ஏற்படுத்திய ஃபீவரை காட்டிலும் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையவுள்ள தளபதி 68 படம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தளபதி 68 படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

தளபதி 68 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் இளைஞர் மற்றும் வயதானவர் தோற்றத்திற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சல்சிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு 3D VFX Scan எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட்டை ஷாருக்கான் மற்றும் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment