என்னா பங்கு… மாட்டிக்கிட்ட பங்கு…ட்ரெண்டாகும் விஜய்யின் பழைய வீடியோ…

by vignesh

விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாட்டு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் முடிவும் அவரது அறிக்கையும் ஆதரவு, வரவேற்பு, எதிர்ப்பு, விமர்சனம் என பலவிதமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், அரசியல் எனது வேட்கை என குறிப்பிட்டிருந்தார்.

தலைவா திரைப்படம் வெளியான போது அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் கலந்துகொண்டார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்த விஜய்யிடம் “தலைவா திரைப்படம் நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு சொல்லாம சொல்லுதா” என கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டதுமே சிரித்துவிட்ட விஜய், ”தலைவா படத்துலயும் அப்படி சொல்லல, நானும் அது உண்மைன்னு சொல்லல… நீங்க தான் இந்த மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க” என பதிலளித்துள்ளார்.

எனக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமே விருப்பம், அரசியலில் சுத்தமாக விருப்பமே கிடையாது.. மக்களின் கலைஞனாக எல்லோருக்கும் பொதுவான நடிகனாக இருக்க மட்டுமே ஆசை என விஜய் கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் சேர் செய்து விடுப்பா.. விடுப்பா அரசியல் இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லி வருகின்றனர்.

You may also like

Leave a Comment