பார்ட்டி நடக்குதா? படம் எடுக்குறிங்களா?- GOAT அப்டேட்…

by vignesh

G.O.A.T (The Greatest Of All Time) என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் முதல் ஷெட்யூலுடன் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல் தற்போது சென்னையில் நடந்து வருகிறது அதுவும் கோவளத்தில் உள்ள நட்சத்திர பங்களாவில் நடந்து வருகிறது. கடல் காற்று, உல்லாச கேளிக்கை விடுதி என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடப்பது, ஏதோ பார்ட்டி நடப்பது போல இருப்பதால், தளபதி விஜய் வீட்டுக்கு கூட போகாமல் இரவு பகலாக அங்கேயே இருப்பதாக கூறப்படுகிறது. கோவளத்தில் இருந்து நீலாங்கரையில் இருக்கும் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு 20 நிமிடத்தில் காரில் பயணித்தால் சென்றுவிடலாம்.

ஆனால், விஜய்யோ வீட்டுக்கு செல்ல மனமில்லாமல், கோவளம் படப்பிடிப்பு தளத்திலேயே இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் எதிர்காலத்தில் அரசியல் தலைவராக வேண்டிய விஜய், இப்படி கேளிக்கைக்கு ஆசைப்படலாமா என்றும், என்ன விஜய் இதெல்லாம் என்றும் அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment