கன்னடத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி…

by vignesh

தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக கன்னட திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளாராம் விஜய் சேதுபதி.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இதுகுறித்து கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ‘லீடர் ராமையா’ என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை, சத்ய ரத்னம் இயக்கவுள்ளாராம். மக்களால் உருவாக்கப்பட்ட அரசன் என்ற டேக் லைனுடன் ‘லீடர் ராமையா’ படம் வெளியாகுமாம்.

சித்தராமையாவின் சிறு வயது சம்பவங்கள், கல்லூரி நாட்கள், வழக்கறிஞராக இருந்தபோது என மூன்று காலக்கட்டங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. இதில் வழக்கறிஞர் சித்தராமையா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும், அதற்காக அவர் கால்ஷீட்டும் கொடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கன்னடத்தில் செம்ம மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

You may also like

Leave a Comment