இளையராஜாவின் மகளும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் GOAT படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தனது சகோதரியின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருக்கும் வெங்கட் பிரபு மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்கும் வகையில் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்துவருகிறார் வெங்கட் பிரபு. இதனால் விஜய்யும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.