ரஜினிகாந்தை ட்ரோல் செய்ய மாட்டோம்.. சபதம் எடுத்த விஜய் ரசிகர்கள்..

by vignesh

லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜய் நான் பார்த்து வளர்ந்த புள்ள. அவரை நான் காக்கான்னு சொல்லல.. ஆனால், நான் சொன்ன காக்கா – கழுகு கதையை சிலர் அப்படியே திரித்து ரசிகர்கள் மத்தியில் சண்டையை உண்டாக்கி விட்டனர் என ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியது விஜய் ரசிகர்களை அமைதியாக்கி உள்ளது.
படுமோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ மீம்களை பயன்படுத்தி ரஜினிகாந்தை மோசமாக விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், இனிமேல் ரஜினிகாந்துக்கு உரிய மரியாதை கொடுப்போம் என்றும் ரஜினிகாந்தை ட்ரோல் செய்ய மாட்டோம் என பல விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதுவரை ரஜினிகாந்தை படுமோசமாக விமர்சித்து வந்தவர்களே இனிமேல் சூப்பர் ஸ்டாரை அப்படி பேச மாட்டோம் என சத்தியம் செய்யாத குறையாக பதிவுகளை போட ஆரம்பித்துள்ளனர்

You may also like

Leave a Comment