சர்ச்சையில் சிக்கிய நடிகர் போலீசார் எடுத்த அதிரடி ஆக்க்ஷன்…!

by vignesh

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளார் என்பது தான் தற்போது கோலிவுட்டில் ட்ரெண்டிங் நியூஸாக மாறியுள்ளது.  நேற்றைய தினம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்தித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் விஜய் பனையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வருவதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். இதனால், அக்கரை ஜங்ஷன் போக்குவரத்து சிக்னலில் விதிகளை மீறி விஜயின் கார் நிற்காமல் சென்றது.

இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து சிக்னலை மீறியதாக சென்னை போக்குவரத்து போலீஸ் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment