இளையராஜாவுக்காக நோ சொன்ன விஜய்…

by vignesh

நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த பிளான் செய்திருந்தார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பு இடங்களை பார்வையிட ஏற்கெனவே வெங்கட் பிரபு இலங்கை சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார். இதனால் விஜய் தனது கோட் பட படப்பிடிப்பினை  ரத்து செய்யச் சொன்னது மட்டுமில்லாமல் ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்டுகளையும் வெளியிட வேண்டாம் என வெங்கட் பிரபுவிடம் கேட்டுக்கொண்டாராம்.

 

You may also like

Leave a Comment