நயனிடம் கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்???

by vignesh

நடிகை நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் ஒரு கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார் நயன். பல வருடங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு ஒருவழியாக கடந்த வருடம் மகாபலிபுரத்தில் இரண்டு பேரும் பிரமாண்டமாக திருமணம் செய்த்கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது சர்ச்சையான சூழலில் விசாரணை நடந்தது. அதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன் தாராவுக்கு ஒரு கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதற்கு கமிட்டானதும் நயனிடம் ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் ஒத்துக்கொண்டார். ஆனால் விக்னேஷ் சிவனோ பாலிவுட் சென்று நடித்தால் திருமணத்துக்கு மேற்கொண்டு லேட் ஆகும். அதனால் என்னை திருமணம் செய்துகொண்ட பிறகு நீ எங்கு வேணாலும் போ என்று விக்னேஷ் சிவன் கண்டிஷன் போட்டதாகவும், அதன் பிறகுதான் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment