தெரியாமல் லைக் போட்டுவிட்டேன்… மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

by vignesh

லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியிருக்கிறார் என பல சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் விஜய்யை கெட்ட வார்த்தை பேசச் சொன்னதே நான் தான் என லோகேஷ் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அண்மையில் விஜய்க்கும் லோகேஷிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதால் தான் லோகேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலிருந்து லியோ என்ற வார்த்தையை நீக்கியதாக கூறப்பட்டது.இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட்டு இருந்த நிலையில் அந்த ட்விட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்து இருக்கிறார்.

‘நான் அந்த பதிவில் லோகேஷ் வீடியோ இருந்ததை பார்த்தவுடன் லைக் செய்துவிட்டேன். அதில் என்ன இருக்கிறது என படிக்கவில்லை. இது என் தவறு தான்.”இதற்காக உலகம் முழுவதும் இருக்கும் தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.

You may also like

Leave a Comment