லிட்டில் ஜாஃப்னா படத்தில் வேல ராமமூர்த்தி

by vignesh

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பாரீஸ் நகரத்தில் உருவாகும் ‘லிட்டில் ஜாஃப்னா’ (குட்டி யாழ்ப்பாணம்) என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது

பாரீஸில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழர்கள் உருவாக்கும் படம் ஒன்றில் நடிக்கிறேன். படத்துக்கு ‘லிட்டில் ஜாஃப்னா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘ஐயா’ என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். லாரன்ஸ் என்பவர் இயக்குகிறார். பாரீஸ் தமிழர்கள் நடிக்கிறார்கள். இதற்காக வரும் 20-ம் தேதி அங்கு செல்ல இருக்கிறேன். அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

You may also like

Leave a Comment