சந்திரமுகி 2 டப்பிங்கை முடித்த வடிவேலு!!!

by vignesh

நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பி வாசுவே இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தில் முருகேசனாக பட்டையை கிளப்பியுள்ளார் வடிவேலு. அவர் தற்போது சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடிகர் வடிவேலு லைவ்வாக டப்பிங் செய்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் complicated உள்ளிட்ட சில டயலாக்குகளை வடிவேலு தனக்கேயுரிய ஸ்டைலில் பேசுவதை பார்க்க முடிகிறது. இந்தப் படத்திலும் முந்தையை பாகத்தை போல, கோவாலு, மாப்பு போன்ற டயலாக்குகள் இடம்பெற்றிருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment