மாமன்னன் கொடுத்த மாஸ்ஸால் சம்பளத்தை உயர்த்தியா வடிவேலு???

by vignesh

வடிவேலு சம்பளம்  மாமன்னன் படம் கொடுத்த வெற்றியை அடுத்து வடிவேலு தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

நகைச்சுவையில் தவிர்க்க முடியாத நடிகர் வடிவேலு. அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் வெடித்து சிரிப்பார்கள். பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கலாய்த்துக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர். இதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகிறது.
அதுமட்டுமின்றி  இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.இந்நிலையில் வடிவேலு தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாமன்னன் படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றனவாம். எனவே அவர் தனது சம்பளத்தை ஐந்து கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

You may also like

Leave a Comment