40 வயதில் இரண்டாவது திருமணம் ஏன்? காரணம் கூறிய நடிகை ஊர்வசி

by vignesh

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து பின் கே. பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தவர் நடிகை ஊர்வசி . 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.பின் இவர் 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்தார், 2008ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.

விவாகரத்திற்கு மனோஜ் குடும்பம் தான் காரணம், அவர்கள் தான் என்னை குடிக்கு அடிமையாகி விட்டார்கள், இதனால் தான் விவாகரத்தும் ஆனது என பேசியுள்ளார்.குடி என்ற காரணத்தை காட்டி எனது மகளையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். அப்போது நான் தனிமையில் மன அழுத்தத்தில் இருந்த போது எங்களுடைய குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்துகொண்டேன்.

எனக்கு மறுமணம் ஆகும் போது எனக்கு 40 வயது, அந்த வயதில் மறுமணமா என பலர் விமர்சித்தார்கள். தற்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.

You may also like

Leave a Comment