GOAT கைகொடுத்த நேரம்.. 3 படங்களில் கமிட்டான டாப் ஸ்டார்

by vignesh

வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசாந்த். செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், சாக்லேட், ஜோடி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களால் டாப் ஸ்டராக கொண்டாடப்பட்டார். திருமணத்திற்குப் பின்னர் ஃபீல்ட் அவுட் ஆனார்  பிரசாந்த், இந்நிலையில், விஜய்யின் GOAT – தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்தும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த், GOAT ஷூட்டிங் நல்லபடியா போய்கொண்டு இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து சமீபத்தில் பிரசாந்த் கொடுத்த பேட்டி ஒன்றில் தொடர்ந்து நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் 3 படங்களில் கமிட்டாகியுள்ளதாக பிரசாந்த் தெரிவித்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment