குடும்பத்தில் முற்றிப்போன சண்டை.. வீட்டை விட்டு ஓடிப்போன நடிகர் யார் ???

by vignesh

விஜய் குடும்பத்தில் முற்றிப்போன சண்டை காரணமாக வீட்டைவிட்டு ஓடிப்போனார் நடிகர் விஜய். இளைய தளபதியாக உள்ளே நுழைந்து பின்னர் தளபதி .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் படம் லியோ. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே அதன் ப்ரீ பிஸ்னெஸ் கிட்டத்தட்ட 450 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். அதேபோல் அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஆடியோ ரைட்ஸும் 24 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக பேசப்படுகிறது.

அதன்படி தனது 68ஆவது படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பள பேச்சுவார்த்தையே 175 கோடி ரூபாயிலிருந்துதான் ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் பலர் கூறுகின்றனர்.

இப்படி விஜய் தனக்கென்ற ஒரு சிம்மாசனத்தை அமர்ந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் துணையாக இருந்தது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்கு பக்கபலமாக நின்றார் அவர். இருப்பினும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை விஜய் தனது தந்தையிடம் சொன்னபோது தீவிரமாக மறுத்தார். தற்போது தந்தையை ஒத்துக்கொள்ள வைப்பதற்காக விஜய் செய்த செயல் குறித்து தெரியவந்திருக்கிறது

அதாவது தான் நடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக அடம் பிடித்திருக்கிறார் விஜய். ஆனால் எஸ்.ஏ.சந்திர்சேகரோ ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் ஒரு நாள் கடுமையான வாக்குவாதத்தில் சண்டை நடந்திருக்கிறது. உடனே விஜய் ஒரு லெட்டரை எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போயிருக்கிறார். வேறு எங்கும் செல்லவில்லை சென்னையில் இருக்கும் உதயம் தியேட்டருக்குத்தான்.

இரண்டு மணி நேரம் ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்துவிடலாம். அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் பதற்றமடைவார்கள் என கணக்கு போட்டிருந்தார் விஜய். ஆனால் நடந்ததோ வேறு. விஜய் உதயம் திரையரங்கில்தான் இருக்கிறார் என்பதை எஸ்.ஏ.சி தெரிந்துகொண்டார். படம் முடிந்து வெளியே வந்த விஜய்யை கையோடு வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகுதான் விஜய்யின் விருப்பத்தை மறுதலிக்க முடியாமல் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்தத் தகவலை விஜய் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

You may also like

Leave a Comment