‘தனி ஒருவன் 2’ அதிகாரபூர்வ அப்டேட்…

by vignesh

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக அசத்தியிருந்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் அப்போதே ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது.

படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோகன்ராஜாவை பொறுத்தவரை அவர் கடைசியாக சிரஞ்சிவி நடித்த ‘லூசிஃபர்’ ரீமேக் படத்தை தெலுங்கில் இயக்கியிருந்தார். இதையடுத்து அவர் ‘தனி ஒருவன் 2’ இயக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment