கிறங்கடிக்கும் ஜெயிலர் காவாலா சாங் போஸ்டர்!

by vignesh

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று ஜூலை 6 மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இந்நிலையில், காவாலா பாடலின் போஸ்டரில் தமன்னாவின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் தமன்னா ஆட்டம் போட்டுள்ள ‘காவாலா’ என்ற பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக களமிறக்குகிறார் நெல்சன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கே இது புரியாத புதிரான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. செம்ம பெப்பியான குரலில் ‘வா நூ ஆவாலா’ எனத் தொடங்கும் இப்பாடல், தமன்னாவின் ரசிகர்களுக்கு கிளாமர் ட்ரீட்டாக இருக்கும் எனத் தெரிகிறது.

You may also like

Leave a Comment