சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவை கலக்கும் இசையமைப்பாளர் தமன்

by vignesh

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசனில்  நீதிபதியாக கலந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஹரிணி, ரிச்சா ஆகிய இரு பாடகர்கள் “ஊர்வசி ஊர்வசி” பாடலை மிக அற்புதமாக பாடினார்கள். அவர்கள் பாடிய வீடியோவை, கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பகிர்வதாக வாக்குறுதி தந்தார் தமன்.

கௌரவ் எனும் பாடகர் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலை பாடினார். அதில் இம்ப்ரெஸ் ஆன தமன், அனிருத் மற்றும் தளபதி விஜய்யிடம் கூட்டிப்போவதாக வாக்குறுதி தந்தார். தமன் நீதிபதியாக அல்லாமல், அனைவருடனும் மிக சகஜமாக பழகி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

 

You may also like

Leave a Comment