தளபதி 68 மாஸ் அப்டேட்!!!

by vignesh

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.

இதில்,ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாத், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

மைக் மோகன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அப்பா,மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில், விஜய்யின் இளவயது நண்பர்களாக பிரபுதேவா மற்றும் பிரசாந்த் நடிக்க உள்ளனர்.

விஜய், பிரபு தேவா மற்றும் பிரஷாந்த் ஆகிய மூவரும் இடம்பெறும் பாடல் De-Aging தொழில்நுட்பத்தை கொண்டு எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் இளம் வயது விஜய், தனது இரு நண்பர்களுடன் இணைந்து பாடும் பாடலாக இருக்கலாம், விரைவில் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment