டேட்டிங் சென்ற விஜய், த்ரிஷா???

by vignesh

லியோ படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் சமீபத்தில் முடிவடைந்தது. ஷூட்டிங்கை முடித்த விஜய் ஓய்வு எடுப்பதற்காக லண்டனில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய்யும், த்ரிஷாவும் வெளிநாட்டில் ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பதுபோல் புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் தீயாக பரவியது.

அதனைப் பார்த்த பலரும் அவர்கள் இரண்டு பேரும் நார்வேயில் டேட்டிங் சென்றிருப்பதாக கொளுத்திப்போட்டனர். இதனையடுத்து பல ஆண்டுகள் கழித்து எண்ணெய் ஊற்றப்பட்டதால் மீண்டும் இருவர் பற்றிய வதந்தி வேகமாக பரவியது. இதற்கிடையே விஜய் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது என்றும் ஒரு தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யும், த்ரிஷாவும் வெளிநாடுக்கு சென்றதாக பரவிய தகவல் குறித்த உண்மை நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி தற்போது பரவிக்கொண்டிருக்கும் புகைப்படமானது லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என்றும், அந்தப் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சமூக வலைதள கணக்கிடம் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் காப்பி ரைட்ஸ் உரிமை கோரியிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இந்தப் புகைப்படமானது லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது உறுதியாகியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment