அழகாக ஆசைப்பட்டு உயிரைவிட்ட ஹீரோயின்!

by vignesh

பார்ப்பதற்கு மிகவும் அழகாக, ரொம்ப க்யூட் ஆகவும் நடித்து வந்த நடிகை ஒருவர், மேலும் அழகாக வேண்டும் என்ற ஆசையில் உயிரையே விட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த பம்பரக் கண்ணாலே படத்தில் பூஜா கதாபாத்திரத்தில் நடித்த ஆர்த்தி அகர்வால் தான் அவ்வாறு உயிரை விட்ட நடிகை. தனக்கு படவாய்ப்புகள் குறையவே இன்னும் அழகு சேர்க்க வேண்டும் என்பதற்காக விபரீத முடிவை எடுக்க ஆரம்பித்தார்.

நடிகை பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்க, தனது உடம்பை குறைக்க மருந்து மாத்திரைகள் எடுத்துள்ளார். ஆனால் இதன் மூலம் இவருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்ல, அங்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு மூச்சு திணறல் வந்ததால் திடீரென்று மாரடைப்பால் 31 வது வயதில் இறந்து போய்விட்டார்.

இவ்வாறு பட வாய்ப்புக்காக தனது உருவத்தை மாற்ற நினைத்த நடிகை ஆர்த்தி அகர்வால், இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

You may also like

Leave a Comment