அது வைரமே இல்லை, பாட்டில் ஓப்பனர்.. ரசிகர்கள் ஷாக்!!!

by vignesh

நடிகை தமன்னா தற்போது காவாலா பாடல் மூலமாக மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறார்.

அதனால் தமன்னா பற்றி தினம் ஒரு பரபரப்பு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமன்னா கையில் 2 கோடி ருபாய் மதிப்புள்ள வைரத்தை மோதிரமாக போட்டிருக்கும் போட்டோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.அந்த மோதிரத்தை நடிகர் ராம் சரணின் மனைவி உபஸ்னா தான் கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார். அந்த வைரம் தான் உலக அளவில் 5வது பெரிய மோதிரம் என்றும் செய்தி தற்போது பரவி வருகிறது.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்க தமன்னா ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருக்கிறார். “அது வைரமே இல்லை, பாட்டில் ஓப்பனர் உடன் தான் நாங்க போட்டோ எடுத்தோம்’ என கூறி இருக்கிறார்.

அது வைரம் இல்லை என அறிந்து தற்போது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment