விஜய்க்கு டி ராஜேந்தர் கொடுத்த பன்ச்…

by vignesh

கோலிவுட் ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்கவுள்ள விஜய் அதன் பின்னர் சினிமாவில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார். இனி முழுநேர அரசியல் தான் என முடிவு செய்துவிட்டதால் சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய்.

இதனையடுத்து விஜய்க்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விஜய்யை வாழ்த்தியுள்ள டி.ஆர், “அரசியல் என்பது பொதுவழி, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள், அவரைப் பற்றி பண்ணவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்” என அடுக்கு மொழியில் பன்ச் கொடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment