சூரியா ஜோதிகா தம்பதிகள் கோடைவிடுமுறை கொண்டாட்டம்

by vignesh
surja-jothika-family

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் தங்களது மகள் மற்றும் மகனோடு இணைந்து கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் சென்று வந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்தக் கங்குவா திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் பக்கா பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது.

ஏற்கனவே அமேசான் பிரைம் வீடியோவில் தென்னிந்திய மொழிகளில் இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத பெரிய தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கும் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment