போதைப்பொருள் வழக்கில் நடிகை வரலக்ஷ்மிக்கு சம்மன்

by vignesh

வரலட்சுமி நடிகர் சரத்குமாரின் மகள். இவர்  தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர்.

கேரளாவில் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தொடர்புடையவர்களை தற்போது NIA அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.சமீபத்தில் வரலட்சுமி உதவியாளராக இருந்த ஆதிலிங்கம் என்ற நபரை NIA அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் வரலட்சுமிக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை பற்றி விசாரணை நடத்த தற்போது வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தற்போது ஆந்திராவில் தான் ஷூட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் விசாரணைக்கு வந்து கலந்து கொள்வதாகவும் கூறியிருக்கிறாராம் வரலக்ஷ்மி.

 

 

You may also like

Leave a Comment