தங்கல் பட நடிகை மரணம் !!!

by vignesh

கடந்த 2016 -ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பபிதா போகத்தின் இளம் வயது கதாபாத்திரத்தில் சுஹானி பட்னாகர் நடித்திருப்பார். இவர் ஹிந்தியில் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் குறைவால் பாதிக்கப்பட்டுருந்ததாக கூறப்படுகிறது .

இதனால் சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். இந்நிலையில் 19 வயதான சுஹானி பட்னாகர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

You may also like

Leave a Comment