ஜெயிலர் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்…

by vignesh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ரிலீசாகி உலக அளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் ஜெயிலரை குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் இலங்கை வவுனியா சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜனிகாந்த் நற்பணி மாமன்ற உறுப்பினர்கள் படம் ரிலீசாகி வெற்றி பெற்றதற்காகவும், 25வது நாளையொட்டியும் கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் 25 வது நாள் வெள்ளி விழா நாயகனின் ஜெயிலர் திரைப்பட வெள்ளி விழா வெற்றி விழாவை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment