செல்வராகவனுடன் விவாகரத்து காரணம்குறித்து பேசிய சோனியா அகர்வால்

by vignesh

சோனியா அகர்வால்மற்றும் செல்வராகவன் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்ட திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போதும், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

செல்வராகவன் குடும்பத்தினர் அனைவரும் தன்னை நடிக்க கூடாது என எதிர்த்ததாகவும், எனவே ஒரு வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.அதன்பின் குஷ்பு மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ஒப்புக் கொண்டதால் மீண்டும் செல்வராகவன் குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர்.

இதனால் விவாகரத்து செய்ய சொல்லி தன்னை செல்வராகவன் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment